'ஜெயிலர்' படத்தின் 3வது பாடல் 'ஜுஜுபி' இன்று மாலை வெளியீடு

'ஜெயிலர்' படத்தின் 3வது பாடல் 'ஜுஜுபி' இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது.
'ஜெயிலர்' படத்தின் 3வது பாடல் 'ஜுஜுபி' இன்று மாலை வெளியீடு
Published on

சென்னை,

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி தற்போது 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடித்துள்ளார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 'ஜெயிலர்' படத்தின் 'காவாலா' மற்றும் 'இது டைகரின் கட்டளை' பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

இந்நிலையில் 'ஜெயிலர்' படத்தில் இடம்பெற்றுள்ள 3வது பாடல் பாடல் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டது. அதன்படி "ஜுஜுபி" என்ற பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாக அறிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com