இரண்டு பிரபல ஓடிடி தளங்களில் வெளியானது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்...!


இரண்டு பிரபல ஓடிடி தளங்களில் வெளியானது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்...!
x

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் நெட்பிளிக்ஸ் மற்றும் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

சென்னை,

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தீபாவளியை முன்னிட்டு, 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியது. இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் வெற்றியை பதிவு செய்தது. இதுவரை உலகளவில் ரூ.70 கோடிக்கு மேல் இந்த படம் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' திரைப்படம் இரண்டு பிரபல ஓடிடி தளங்களில் இன்று வெளியாகி உள்ளது. இந்த படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் இந்திய ரசிகர்கள் நெட்பிளிக்ஸ் தளத்தில் பார்க்கலாம் எனவும் இந்தியாவிற்கு வெளியே உள்ள ரசிகர்கள் சன் நெக்ஸ்ட் தளத்தில் பார்க்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story