தமன்னாவை போல் கவர்ச்சி உடையில் சிம்ரன், நயன்தாரா, கத்ரீனா 'காவாலயா' நடனம் ...!

'ஜெயிலர்' படத்தின் முதல் பாடலான 'காவாலயா' பாடல் சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.
தமன்னாவை போல் கவர்ச்சி உடையில் சிம்ரன், நயன்தாரா, கத்ரீனா 'காவாலயா' நடனம் ...!
Published on

சென்னை

கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்த படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடிக்கிறார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.

'ஜெயிலர்' படத்தின் முதல் பாடலான 'காவாலயா' பாடல் சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள இந்த பாடலை ஷில்பா ராவ் பாடியுள்ளார். இந்த பாடலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்

இந்தப் பாடலில் தமன்னா மற்றும் ரஜினிகாந்த் இணைந்து ஆட்டம் போட்டிருந்தனர். இந்தப் பாடல் சர்வதேச அளவில் பல்வேறு தரப்பினரையும் கவர்ந்துள்ளது.

இந்நிலையில் செந்தில் நாயகம் என்ற செயற்கை நுண்ணறிவு என்ஜினியர் தமன்னா பாட்டியாவின் நடனத்தை பல்வேறு நடிகைகளும் ஆடும் ஸ்டைலுக்கு மாற்றி அமைத்து வீடியோ வெளியிட்டு உள்ளார்.இந்த வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகிறது

செந்தில் நாயகத்தின் டுவிட்டர் கணக்கில், சிம்ரன்,ஹன்சிகா, நயன்தாரா, மாளவிகா, கத்ரீனா கைப், கெய்ரா அத்வானி, மற்றும் காஜல் அகர்வால் ஆகியோர் ஆடும் ரீல்ஸ் வீடியோ காணப்படுகின்றன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com