வெளியானது 'கோழிப்பண்ணை செல்லதுரை' படத்தின் 'காத்திருந்தேன்' பாடல்

'கோழிப்பண்ணை செல்லதுரை' படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான 'காத்திருந்தேன்' பாடல் வெளியாகி உள்ளது.
வெளியானது 'கோழிப்பண்ணை செல்லதுரை' படத்தின் 'காத்திருந்தேன்' பாடல்
Published on

சென்னை,

'தென்மேற்கு பருவக்காற்று, நீர் பறவை, தர்மதுரை' ஆகிய வெற்றி படங்களை இயக்கி கவனம் பெற்றவர் இயக்குனர் சீனு ராமசாமி. இவரது இயக்கத்தில் இறுதியாக வெளியான 'மாமனிதன்' படம் விமர்சகர்களிடையே நல்ல பெயரைப் பெற்றது. இயக்குனர் சீனு ராமசாமி தற்போது 'கோழிப்பண்ணை செல்லதுரை' என்கிற பெயரில் புதிய படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் ஏராளமான புதுமுகங்களான ஏகன், பிரிகிடா, ஐஸ்வர்யா தத்தா, தினேஷ் முத்தையா, சத்யா உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அசோக்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். என்.ஆர்.ரகுநந்தன் இசை அமைத்துள்ளார். 

கிராமத்துக் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர், டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆக்லெண்ட் சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வான முதல் தமிழ்ப்படம் என்கிற பெயரையும் பெற்றுள்ளது. அண்ணன் - தங்கை உறவைப் பேசும் படமாக இது உருவாகியுள்ளது.

இந்த நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான 'காத்திருந்தேன்' என்ற பாடல் வெளியாகி உள்ளது. தற்போது இந்த பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com