ராஜமவுலி இயக்கும் மகேஷ் பாபுவின் 29- வது படம் குறித்த அப்டேட்

நடிகர் மகேஷ் பாபு மற்றும் டைரக்டர் ராஜமவுலி துபாயில் இருந்து ஐதராபாத் திரும்பிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன
ராஜமவுலி இயக்கும் மகேஷ் பாபுவின் 29- வது படம் குறித்த அப்டேட்
Published on

சென்னை,

பிரபல இயக்குனர் ராஜமவுலி. இவர் இயக்கிய பாகுபலி மற்றும் ஆர்.ஆர்.ஆர் படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. முன்னதாக ஆர்.ஆர்.ஆர். படம் ஜப்பானில் திரையிடப்பட்டது. அங்கும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இயக்குனர் ராஜமவுலி அடுத்ததாக மகேஷ் பாபுவின் 29-ம் படத்தை இயக்குவதாக கூறப்படுகிறது. மகேஷ் பாபு நடிப்பில் சமீபத்தில் வெளியான குண்டூர் காரம் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்நிலையில், நடிகர் மகேஷ் பாபு மற்றும் டைரக்டர் ராஜமவுலி துபாயில் இருந்து ஐதராபாத் திரும்பிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அதில் மகேஷ் பாபு தலையில் நீண்ட முடிகளுடன் காணப்படுகிறார்.

இதனை கண்ட ரசிகர்கள், பல்வேறு கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒருவர், பரவிய தகவல்களை இந்த புகைப்படங்கள் உறுதிப்படுத்தியுள்ளன என்றும், மற்றொருவர் இந்த தோற்றத்தில் மகேஷ் பாபு சிங்கம்போல இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் படம் குறித்த அப்டேட்டையும் கேட்டு வருகின்றனர்.

இவ்வாறு புகைப்படம் வெளியாகி படம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளது. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com