ரீ-ரிலீஸ் ஆகும் நானியின் 'ஜெர்சி' - படக்குழு அறிவிப்பு
![ரீ-ரிலீஸ் ஆகும் நானியின் ஜெர்சி - படக்குழு அறிவிப்பு ரீ-ரிலீஸ் ஆகும் நானியின் ஜெர்சி - படக்குழு அறிவிப்பு](https://media.dailythanthi.com/h-upload/2024/04/15/1616511-nani-7-apr-15.webp)
நானி நடித்த ஜெர்சி திரைப்படம் ரீ-ரிலீஸ் ஆக உள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் நானி. இவர் நடித்த 'நான் ஈ' திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இவர் சமீபத்தில் நடித்த ஹாய் நான்னா திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. சர்வதேச விருதையும் வென்றது.
இந்நிலையில், இவர் நடித்து கடந்த 2019-ம் ஆண்டு வெளியான ஜெர்சி திரைப்படம் தற்போது ரீ-ரிலீஸ் ஆக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
கவுதம் தின்னானூரி இயக்கத்தில் நானி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், சத்யராஜ் மற்றும் பலர் நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் 19-ம் தேதி வெளியான படம் 'ஜெர்சி'. சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்தது. இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், இந்த படம் வெளியாகி 5 ஆண்டுகள் நிறைவு செய்ததை முன்னிட்டு வரும் 20-ம் தேதி திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆக உள்ளது. இது குறித்து படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது.