பட அதிபருக்கு நோட்டீஸ்... ரூ.10 கோடி நஷ்டஈடு கேட்கும் நடிகர் சுதீப்


பட அதிபருக்கு நோட்டீஸ்... ரூ.10 கோடி நஷ்டஈடு கேட்கும் நடிகர் சுதீப்
x

தமிழில் விஜய்யுடன் புலி படத்தில் நடித்து பிரபலமான சுதீப் நான் ஈ, முடிஞ்சா இவன புடி படங்களிலும் நடித்துள்ளார். கன்னட நடிகரான இவர் கன்னட திரையுலகில் முன்னனி கதாநாயகனாகவும் இருக்கிறார்.சில தினங்களுக்கு முன்பு சுதீப் மீது தயாரிப்பாளர் எம்.என்.குமார் கன்னட திரைப்பட வர்த்தக சபையில் அளித்த புகாரில் "சுதீப்பை வைத்து புதிய படம் தயாரிக்க முடிவு செய்து 8 வருடங்களுக்கு முன்பே அவருக்கு சுமார் ரூ.9 கோடிவரை கொடுத்துள்ளேன்.

ஆனால் இதுவரை அவர் எனது படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுக்கவில்லை. அவருடையை வீட்டுக்கு சென்றால் சுதீப் வீட்டில் இல்லை என்று சொல்கிறார்கள். செல்போன் நம்பரையும் மாற்றி விட்டார். இரு தினங்களுக்குள் எனக்கு முடிவு தெரியவில்லை என்றால் சுதீப் வீட்டின் முன்னால் முற்றுகை போராட்டம் நடத்துவேன்'' என்று கூறியிருந்தார்.இதையடுத்து தயாரிப்பாளர் எம்.என்.குமாருக்கு சுதீப் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில் பொய்யான தகவலை வெளியிட்டு எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக ரூ.10 கோடி நஷ்டஈடு வழங்கி மன்னிப்பு கேட்கவேண்டும் இல்லையேல் மான நஷ்ட வழக்கு தொடருவேன்'' என்று குறிப்பிட்டு உள்ளார்.

1 More update

Next Story