தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகும் நடிகை தர்ஷனா


தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகும் நடிகை தர்ஷனா
x

தெலுங்கில் உருவாகி வரும் ‘பரதா’ புதிய படத்தில் தர்ஷனா நடித்து வருகிறார். இப்படத்தின் மூலம் அவர் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகிறார்.

பிரபலமான மலையாள நடிகை தர்ஷனா ராஜேந்திரன்.இவர் தனது சிறந்த நடிப்பின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். "வைரஸ்" "இருள்" "ஹிருதயம்" மற்றும் "ஜெய ஜெய ஜெய ஜெய ஹே" உள்ளிட்ட படங்களில் சிறப்பாக நடித்திருந்தார். இவரது நடிப்பில் வௌியான ஹிருதயம் திரைப்படம், மலையாளம் மட்டுமன்றி தமிழ், தெலுங்கு மொழிகளில் பெரிய ஹிட் அடித்தது. ஹிருதயம் படத்தில் தர்ஷனாவின் நடிப்பு மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.

ஹிருதயம் படத்தின் வெற்றி தர்ஷனாவின் மார்க்கெட்டை உயர்த்தியது. தர்ஷனா தமிழில் விஜய் சேதுபதி நடித்த கவண் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து கவனம் ஈர்த்தார். அதேபோல, விஷால் நடித்த இரும்புத்திரை திரைப்படத்தில் தங்கையாக நடித்திருப்பார். இதைத் தொடர்ந்து தமிழில் மீண்டும் ஒரு படத்தில் ஒப்பந்தமானார். இப்படத்தில் தர்ஷனாவுடன் இணைந்து பிரபல தமிழ் நடிகர் தர்ஷனும் நடிக்கிறார். தமிழ் இந்த படத்தை இயக்குகிறார்.

இந்நிலையில், தெலுங்கில் உருவாகி வரும் புதிய படத்தில் தர்ஷனா நடித்து வருகிறார். இப்படத்தின் மூலம் அவர் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகிறார். அமிஷ்தா என்ற கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார். பரதா என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தை, பிரவீன் கந்த்ரேகுலா இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு டெல்லி, ஹிமாச்சல், ஐதராபாத் உள்பட பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது. தர்ஷனாவின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக, பரதா படத்தில் அவரது தோற்றத்தை படக்குழு வெளியிட்டு, சிறப்பு வீடியோவையும் பகிர்ந்துள்ளது.


Next Story