'பொன் ஒன்று கண்டேன்' படத்தில் காதல் ஒரு பகுதி மட்டுமே - விளக்கமளித்த டைரக்டர்


பொன் ஒன்று கண்டேன் படத்தில் காதல் ஒரு பகுதி மட்டுமே - விளக்கமளித்த டைரக்டர்
x
தினத்தந்தி 16 April 2024 5:06 AM GMT (Updated: 16 April 2024 5:08 AM GMT)

'பொன் ஒன்று கண்டேன்' படம் காதலை வெளிப்படுத்தும் படமாக மட்டும் இல்லை என்று டைரக்டர் பிரியா கூறினார்.

சென்னை,

அசோக் செல்வன், வசந்த் ரவி மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி இணைந்து நடித்த திரைப்படம் 'பொன் ஒன்று கண்டேன்'. 2005-ம் ஆண்டு பிரசன்னா மற்றும் லைலா நடிப்பில் வெளியான 'கண்ட நாள் முதல்' படத்தை இயக்கிய பிரியா இந்த படத்தை இயக்கினார். யுவன் சங்கர் ராஜா இந்த படத்தை தயாரித்து இசையமைத்தார்.

'பொன் ஒன்று கண்டேன்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக ஜியோ சினிமா மற்றும் கலர்ஸ் தமிழில் வெளியானது. இப்படத்தை பார்த்த ரசிகர்கள் இப்படத்தில் புதிதாக எதுவும் இல்லை என்றும் காதல் தேசம், கண்ட நாள் முதல், அஞ்சலி போன்ற படங்களுடன் ஒப்பிட்டும் பேசினர்.

இந்நிலையில், ரசிகர்களின் இந்த கருத்துக்கு டைரக்டர் பிரியா விளக்கம் தெரிவித்துள்ளார். அவர் பேசியதாவது,

இப்படம் காதலை வெளிப்படுத்தும் படமாக மட்டும் இல்லை. எல்லா உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தும் படமாக இப்படம் இருக்கிறது. வசந்த் ரவியின் கதாபாத்திரம் மகன் - தாய் பந்தத்தை விளக்கும் வகையில் அமைந்துள்ளது. மேலும், அசோக் செல்வனின் கதாபாத்திரம் சகோதரிகளுடனான நல்ல பந்தத்தை உணர்த்துகிறது. எதிர் பாலினத்தை நன்றாக புரிந்துகொள்ளும் வகையிலும் உள்ளது. கதை அதிகமாக உறவுகளைப் பற்றி பேசுகிறது. படத்தில் காதல் ஒரு பகுதி மட்டுமே, இவ்வாறு பேசினார்.


Next Story