'கூலி' படத்தின் படப்பிடிப்பு எங்கு? எப்போது? - வெளியான தகவல்

ரஜினிகாந்த் நடிக்க உள்ள 'கூலி' படத்தின் படப்பிடிப்பு எங்கு? எப்போது? தொடங்கும் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
'கூலி' படத்தின் படப்பிடிப்பு எங்கு? எப்போது? - வெளியான தகவல்
Published on

சென்னை,

நடிகர் ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் படம் 'வேட்டையன்'. லைகா தயாரிக்கும் இப்படத்தை ஜெய் பீம் பட இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கி வருகிறார். இப்படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது. விரைவில் ரிலீஸ் தேதியை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்ததாக ரஜினிகாந்த், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள 'கூலி' திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்க இருக்கிறார். இப்படத்தில் நடிகை சுருதிஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், இப்படத்தில் நடிக்க உள்ள நடிகர், நடிகைகள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

இந்நிலையில், 'கூலி' படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு அடுத்த மாதம் 6-ம் தேதி சென்னையில் தொடங்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

X

Daily Thanthi
www.dailythanthi.com