படத்துக்கு ரூ.8 கோடி நஷ்டம்: விஜய்தேவரகொண்டாவிடம் பணம் கேட்கும் தயாரிப்பாளர்


படத்துக்கு ரூ.8 கோடி நஷ்டம்: விஜய்தேவரகொண்டாவிடம் பணம் கேட்கும் தயாரிப்பாளர்
x

விஜய்தேவரகொண்டா மீது படத்தின் தயாரிப்பு நிறுவனம் நஷ்ட ஈடு கேட்டு போர்க்கொடி உயர்த்தி உள்ளது

விஜய்தேவரகொண்டா, சமந்தா ஜோடியாக நடித்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் திரைக்கு வந்துள்ள 'குஷி' படம் வெற்றி பெற்றுள்ளது. இதனால் மகிழ்ச்சியில் இருக்கும் விஜய்தேவரகொண்டா தனது சம்பாத்தியத்தில் இருந்து ரூ.1 கோடியை எடுத்து 100 குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்போவதாக அறிவித்து உள்ளார்.

இதனை பலரும் பாராட்டி வருகிறார்கள். இந்த நிலையில் ஏற்கனவே 2020-ல் விஜய்தேவரகொண்டா நடித்து தெலுங்கில் வெளியாகி நஷ்டமடைந்த 'வேல்டு பேமஸ் லவ்வர்' படத்தின் தயாரிப்பு நிறுவனமான அபிஷேக் பிச்சர்ஸ் நஷ்ட ஈடு கேட்டு போர்க்கொடி உயர்த்தி உள்ளது.

அந்த நிறுவனம் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "உங்கள் படம் வெற்றி அடைந்ததால் ரசிகர்களுக்கு ஒரு கோடி கொடுப்பது நல்லது தான். ஆனால் உங்களது 'வேல்டு பேமஸ் லவ்வர்' படத்தினால் நாங்கள் ரூ.8 கோடி நஷ்டம் அடைந்தோம். இதுகுறித்து அப்பொழுது யாரும் கண்டுகொள்ளவில்லை.

தயவு செய்து எங்களுக்கும், தியேட்டர் அதிபர்கள் மற்றும் வினியோகஸ்தர்களுக்கும் ஆதரவாக இருங்கள்'' என்று கூறியுள்ளது. இதற்கு விஜய்தேவரகொண்டா ரசிகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

1 More update

Next Story