நடிகை சமந்தாவுக்கு கோயில் நாளை திறப்பு விழா

சம்ந்தா பிரத்யூஷா அறக்கட்டளை மூலம் பல சேவைகளை செய்து வருவதை அறிந்து அவர் மீது மதிப்பு கூடியது.
நடிகை சமந்தாவுக்கு கோயில் நாளை திறப்பு விழா
Published on

விஜயவாடா

நடிகை சமந்தாவுக்கு ஆந்திராவில் பெரும் ரசிகர் கூட்டம் உள்ளது. இந்நிலையில், குண்டூர் அருகே உள்ள பாபட்லா மாவட்டம், அலபாடு கிராமத்தை சேர்ந்த தெனாலி சந்தீப் எனும் ரசிகர், சமந்தாவுக்கு கோயில் கட்டி வருகிறார். இதன் திறப்பு விழா நாளை நடைபெறுகிறது.

இதுகுறித்து சந்தீப் கூறியதாவது:-

சம்ந்தா பிரத்யூஷா அறக்கட்டளை மூலம் பல சேவைகளை செய்து வருவதை அறிந்து அவர் மீது மதிப்பு கூடியது. இதனால் அவருக்கு கோயில் கட்ட தீர்மானித்தேன். இதற்கு எங்கள் வீட்டில் ஒரு பகுதியை ஒதுக்கி கோயில் கட்டி வருகிறேன். தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. நாளை திறப்பு விழா நடைபெறுகிறது" என்றார்.

தங்களுக்குப் பிடித்தமான நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு தென்னகத்தில் உள்ள ரசிகர்கள் நினைவுச் சின்னங்களை எழுப்பும் வழக்கத்தின் ஒரு பகுதியாக குஷ்பு, நயன்தாரா, ஹன்சிகா, நமீதா, ஹனிரோஸ் போன்ற நடிகைகளுக்கு ரசிகர்கள் கோயில்கL கட்டி உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com