அஜித்துக்கு வில்லனாக நடிக்கும் சஞ்சய் தத்?


அஜித்துக்கு வில்லனாக நடிக்கும் சஞ்சய் தத்?
x

'துணிவு' படத்தை தொடர்ந்து அஜித்குமார் 'விடாமுயற்சி' என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார். படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. அஜித்குமார் ஜோடியாக நடிக்க தமன்னாவை முடிவு செய்துள்ளனர். ஏற்கனவே 'வீரம்' படத்தில் இருவரும் நடித்து இருந்தனர்.

விடாமுயற்சி படத்தில் வில்லனாக நடிக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்த நிலையில் அஜித்துக்கு வில்லனாக நடிக்க பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத்திடம் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே கே.ஜி.எப். படத்தில் சஞ்சய் தத் குரூர வில்லனாக மிரட்டி இருந்தார். அந்த படத்துக்கு பிறகு அவருக்கு நிறைய படங்களில் வில்லனாக நடிக்க வாய்ப்புகள் வந்துள்ளன. தற்போது தமிழில் 'லியோ' படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்து வருகிறார்.

விஜய்யை தொடர்ந்து அஜித் படத்திலும் வில்லனாக நடிக்க பரிசீலிப்பதால் படத்துக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1 More update

Next Story