விமானத்தில் பாலியல் தொல்லை: பிரபல நடிகை போலீசில் புகார்...!

நடிகை திவ்ய பிரபா விமான பயணத்தின் போது தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
விமானத்தில் பாலியல் தொல்லை: பிரபல நடிகை போலீசில் புகார்...!
Published on

பிரபல மலையாள நடிகை திவ்ய பிரபா. இவர் தமிழிலும் 'கயல்', 'கோடியில் ஒருவன்' ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

விமான பயணத்தின் போது தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை திவ்ய பிரபா பகிர்ந்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "சமீபத்தில் மும்பையில் இருந்து கொச்சிக்கு விமானத்தில் சென்றேன். விமானத்தில் இருந்த சக பயணி ஒருவர் குடிபோதையில் எனக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார்.

இதுதொடர்பாக அங்குள்ள விமான பணிப்பெண்களிடம் புகார் செய்தபோது அவர்கள் கண்டு கொள்ளவில்லை.

ஆனாலும் நான் தொடர்ந்து புகார் செய்து கொண்டே இருந்ததால், எனது இருக்கையை மட்டும் மாற்றிவிட்டு சென்றனர்.

கொச்சி வந்ததும் விமான நிலைய அதிகாரிகளிடம் இது தொடர்பாக புகார் அளித்தேன். கேரள போலீசாருக்கும் ஆன்-லைன் மூலமாக புகார் அளித்துள்ளேன்.

இந்த விஷயத்தில் பயணிகளின் பாதுகாப்புக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும். உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும்.

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட விமான நிறுவன ஊழியர்கள் நடந்து கொண்ட விதம் எனக்கு அதிர்ச்சியை அளித்தது" என்று கூறியுள்ளார்.

View this post on Instagram

X

Daily Thanthi
www.dailythanthi.com