சிவாஜி 'பா' வரிசை படங்கள்


சிவாஜி பா வரிசை படங்கள்
x

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த 'பா' வரிசையிலான பாலும் பழமும், பாகப்பிரிவினை, பார்த்தால் பசிதீரும், பச்சை விளக்கு, படித்தால் மட்டும் போதுமா உள்பட 8 படங்கள் இங்கு ரிலீஸ் ஆகி உள்ளன.

இந்த திரைப்படங்கள் 1968-70-ல் பீம்சிங் இயக்கத்தில் உருவானவை.

அதேபோல் எம்.ஜி.ஆர். நடித்த எங்கள் வீட்டு பிள்ளை, மாட்டுக்கார வேலன், ஒளி விளக்கு, உலகம் சுற்றும் வாலிபன் உள்ளிட்ட திரைப்படங்கள் ரிலீஸ் செய்யப்பட்டிருக்கின்றன. அந்தக் காலத்தில் வினியோகஸ்தர் அலுவலகம் திருச்சியில் மட்டும் இயங்கி வந்த நிலையில், புதுக்கோட்டையில் தனது திரையரங்கத்திலேயே பழனியப்பா பிக்சர்ஸ் என்ற வினியோகஸ்தர் அலுவலகத்தை தொடங்கி படங்களை வினியோகித்துள்ளார்.

இதில் சித்ராலயா புரொடக்சனில் இயக்குனர் ஸ்ரீதர் தயாரித்த 14 படங்கள் வெளியாகி இருக்கின்றன. இதேபோல் ஜெயலலிதா முதன் முதலாக நடித்த வெண்ணிற ஆடை படமும் வெளியிடப்பட்டுள்ளது. காதலிக்க நேரமில்லை, கலைக்கோவில் திரைப்படங்களும் வெளியாயின. சிவாஜி நடித்த வசந்த மாளிகை திரைப்படம் 88 நாட்கள் ஓடியுள்ளது. தீபாவளி பண்டிகையின் போது கடந்த 1994-ம் ஆண்டு விஜயகாந்த் நடித்த என் ஆசை மச்சான், 1995-ம் ஆண்டு ரஜினி நடித்த முத்து, 1996-ம் ஆண்டு பிரபு நடித்த பாஞ்சாலங்குறிச்சி உள்ளிட்ட படங்களும் இங்கு ரிலீஸ் ஆயின. நடிகர் ரஜினி நடித்த முரட்டுக்காளை படமும் அதிக நாட்கள் ஓடியுள்ளது.

இந்தி நடிகர் அமிதாப்பச்சன், தர்மேந்திரா, அம்ஜத்கான், சஞ்சீவ் குமார், ஹேமமாலினி என இந்தி சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் நடித்திருந்த ஷோலே படம் கடந்த 1975-ம் ஆண்டு வெளியான போது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. அந்தத் திரைப்படத்தை தீபாவளி பண்டிகையின் போது பழனியப்பா திரையரங்கத்தில் ரிலீஸ் செய்தனர்.


Next Story