பல மொழிகளில் சித்தார்த் படம்

பல மொழிகளில் சித்தார்த் படம்
Published on

சித்தார்த் 'சித்தா' என்ற பெயரில் தயாராகும் புதிய படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை எஸ்.யு.அருண்குமார் திரைக்கதை எழுதி இயக்குகிறார். இவர் ஏற்கனவே 'பண்ணையாரும் பத்மினியும்', 'சேதுபதி' ஆகிய படங்களை இயக்கி உள்ளார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.

படத்தின் முதல் தோற்றம் மற்றும் தலைப்பை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார். 'காதலில் சொதப்புவது எப்படி?', 'ஜில் ஜங் ஜக்' ஆகிய படங்களை எடுத்த எடக்கி எண்டர்டெயின்மெண்ட் 4-வது படைப்பாக 'சித்தா' படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தை பல மொழிகளில் வெளியிட திட்டமிட்டு உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com