'ஸ்குவிட் கேம்' 2-வது சீசனின் டீசர் வெளியீடு

'ஸ்குவிட் கேம்' தொடரின் 2-வது சீசன் இந்த மாத இறுதியில் ஓ.டி.டி.யில் வெளியாக உள்ளது.
'ஸ்குவிட் கேம்' 2-வது சீசனின் டீசர் வெளியீடு
Published on

கடந்த 2021-ம் ஆண்டு ஓ.டி.டி தளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் 'ஸ்குவிட் கேம்'. 9 எபிசோடுகளை கொண்ட இந்தத் தொடரை பிரபல இயக்குனர் ஹ்வாங் டாங் - ஹியூக் இயக்கி இருந்தார்.

இந்த தொடர் வெளியான முதல் நான்கு வாரங்களில் 1.65 பில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது. நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அதிகம் பார்க்கப்பட்ட தொடராகவும் இந்த தொடர் உள்ளது. இதனையடுத்து இந்தத் தொடரின் அடுத்த சீசன் எப்போது வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

இந்தநிலையில், 'ஸ்குவிட் கேம்' தொடரின் 2-வது சீசனின் டீசர் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்தத் தொடரின் 2-வது சீசன் வரும் டிசம்பர் மாதம் 26-ம் தேதி வெளியாகும் என நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், 3-வது சீசன் அடுத்த ஆண்டு வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com