சன்னி லியோன் நடித்த 'கொட்டேஷன் கேங்க்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு


சன்னி லியோன் நடித்த கொட்டேஷன் கேங்க் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
x

நடிகை சன்னி லியோன் நடித்துள்ள 'கொட்டேஷன் கேங்க்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மும்பை,

பிரபல நடிகை சன்னி லியோன் தொடக்கத்தில் ஆபாச படங்களில் நடித்து பிரபலமானவர். பின்னர் இந்தி சினிமாவில் அடியெடுத்து வைத்து பல படங்களில் பாடல்களுக்கு நடனம் ஆடி இருக்கிறார். இவர் தமிழில் 'வடகறி' படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி இருந்தார். 'ஓ மை கோஸ்ட், தீ இவன்' ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கு, இந்தி, மலையாள படங்களிலும் நடித்து இருக்கிறார்.

தற்போது சன்னி லியோன் இளைஞர்களை சார்ந்த ரியாலிட்டி ஷோவான 'ஸ்பிளிட்ஸ்வில்லா 15' நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்தநிலையில், நடிகை சன்னி லியோன் 'கொட்டேஷன் கேங்க்' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ஜாக்கி ஷெராப், பிரியாமணி, சாரா அர்ஜுன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விவேக் கே கண்ணன் இயக்கிய இப்படம் காஷ்மீர், மும்பை மற்றும் சென்னையில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

இந்த நிலையில், இது குறித்த பதிவு ஒன்றை சன்னி லியோன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் இப்படம் வருகிற ஆகஸ்ட் 30-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்ற புதிய மோஷன் போஸ்டரை பதிவிட்டுள்ளார்.

இதையடுத்து நடிகை சன்னி லியோன் வரவிருக்கும் "ரங்கீலா, வீரமாதேவி, கொக்க கோலா மற்றும் யுஐ" போன்ற படங்களில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story