இதையெல்லாமா பதிவிடுவார்கள்....! முதலிரவு போட்டோ வெளியிட்ட தனுஷ் பட நடிகை...!

இந்தி திரையுலகின் பிரபல நடிகையான ஸ்வரா பாஸ்கர், தனது நண்பர் மற்றும் சமாஜ்வாடி கட்சியின் மாநில இளைஞரணி தலைவரான பகத் அகமது என்வரை காதலித்து, ரகசிய திருமணம் செய்து கொண்டார்.
இதையெல்லாமா பதிவிடுவார்கள்....! முதலிரவு போட்டோ வெளியிட்ட தனுஷ் பட நடிகை...!
Published on

மும்பை

பாலிவுட்டில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் ஸ்வரா பாஸ்கர். இவர் தனுஷ் நடிப்பில் கடந்த 2013-ம் ஆண்டு ரிலீஸ் ஆன ராஞ்சனா படத்திலும் ஸ்வரா பாஸ்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இது தான் நடிகர் தனுஷ் இந்தியில் நடித்த முதல் திரைப்படமாகும். இவர் சினிமாவில் பிசியாக இருந்தாலும், அவ்வபோது அரசியல் கருத்துக்களை சொல்லி சர்ச்சைகளிலும் சிக்குவதுண்டு.

இந்தி திரையுலகின் பிரபல நடிகையான ஸ்வரா பாஸ்கர், தனது நண்பர் மற்றும் சமாஜ்வாடி கட்சியின் மாநில இளைஞரணி தலைவரான பகத் அகமது என்வரை காதலித்து, ரகசிய திருமணம் செய்து கொண்டார்.

இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர் என்பதனால் சர்ச்சை வெடித்தது. இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாத ஸ்வரா பாஸ்கர் தனது சோசியல் மீடியா பக்கத்தில் தங்களது திருமண புகைப்படத்தை பதிவிட்டு அதிரடி காட்டினார்.

இந்நிலையில், தற்போது நடிகை ஸ்வரா பாஸ்கர் தங்களது முதல் இரவு அறையின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். இந்த அறையை தனது தாயார் தான் அலங்கரித்ததாகவும் ஸ்வரா பாஸ்கர் அந்த பதிவில் குறிப்பிட்டு இருந்தார். நடிகை ஸ்வரா பாஸ்கரின் இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள், இதையெல்லாமா பதிவிடுவார்கள் என அவரை திட்டி வருகின்றனர்.

ஒரு சிலரோ, அவர் சர்ச்சையை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே இதுபோன்ற புகைப்படங்களை பதிவிட்டு வருவதாக சாடி வருகின்றனர். கடந்த 2020-ம் ஆண்டு டெல்லியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தில் தான் ஸ்வரா பாஸ்கரும், பகத் அகமத்தும் சந்தித்துக் கொண்டனர். அந்த சந்திப்பிற்கு பின் இருவரும் காதலிக்க தொடங்கி, தற்போது திருமணம் செய்துகொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com