சினிமா இசைக்கலைஞர்கள் சங்கத்திற்கு நாளை தேர்தல்


சினிமா இசைக்கலைஞர்கள் சங்கத்திற்கு நாளை தேர்தல்
x

சினிமா இசைக்கலைஞர்கள் சங்கத்திற்கான தேர்தல் நாளை நடைபெற உள்ளது.

சென்னை,

தமிழ் சினிமா இசைக்கலைஞர்கள் சங்கத்திற்கான தேர்தல் நாளை நடைபெற உள்ளது. நாளை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்தல் நடைபெற உள்ளது.

இது தொடர்பாக, சினிமா இசைக்கலைஞர்கள் சங்க தலைமை தேர்தல் அதிகாரியும், முன்னாள் நீதிபதியுமான கே.பாலசுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சினிமா இசைக்கலைஞர்கள் சங்க தேர்தல் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் நடந்து கொண்டிருந்த மனுக்கள் மீது இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி இந்த வழக்கில் தொடரப்பட்ட ரிட் மனுக்கள் தள்ளுபடியாகி இருப்பதால், திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்க தேர்தல் நடப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீங்கியுள்ளது. எனவே ஏற்கனவே 23-9-2023 தேதியிட்ட தேர்தல் அதிகாரியின் அறிவிப்பின் தொடர்ச்சியாக வருகிற 18-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை 2023 – 2026-ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் நடைபெறும்.

எனவே சங்க உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் உறுப்பினர் அடையாள அட்டையை காண்பித்து வாக்களிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்' இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story