நில அபகரிப்பு வழக்கில் சிக்கிய நடிகர் ராணா


நில அபகரிப்பு வழக்கில் சிக்கிய நடிகர் ராணா
x

நடிகர் ராணா மீது நில அபகரிப்பு செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகுபலி படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் ராணா. தமிழில் அஜித்குமாருடன் ஆரம்பம், தனுசின் எனை நோக்கி பாயும் தோட்டா, விஷ்ணு விஷாலுடன் காடன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கிறார். இவரையும், நடிகை திரிஷாவையும் இணைத்து கிசுகிசுக்கள் வெளியாகி அடங்கியது. இந்த நிலையில் ராணா மீதும், அவரது தந்தை சுரேஷ் பாபு மீதும் நில அபகரிப்பு முயற்சி வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

இதுகுறித்து பிரமோத் என்ற தொழில் அதிபர் நாம்பள்ளி கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், "ஐதராபாத்தில் உள்ள பிலிம் நகரில் எனக்கு சொந்தமான இடம் உள்ளது. அந்த இடத்தில் இருந்து காலி செய்யும்படி ராணாவும், சுரேஷ்பாபுவும் ரவுடிகளை அனுப்பி என்னை மிரட்டுகிறார்கள். கொலை மிரட்டலும் விடுக்கிறார்கள். இதுகுறித்து போலீசில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை'' என்று குறிப்பிட்டு உள்ளார்.

இந்த வழக்கை கோர்ட்டு பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டு உள்ளது. இருவருக்கும் சம்மனும் அனுப்பப்படுகிறது.


Next Story