வாரிசு' படத்தை பார்த்துவிட்டு தேம்பி தேம்பி அழுத இசையமைப்பாளர் தமன்...! தேற்றிய படக்குழுவினர்!


வாரிசு படத்தை பார்த்துவிட்டு தேம்பி தேம்பி அழுத இசையமைப்பாளர் தமன்...! தேற்றிய படக்குழுவினர்!
x

சென்னை,

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'வாரிசு'. இந்த திரைப்படத்தில் ஷாம், சரத்குமார், பிரபு, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார்.

இந்தநிலையில், வாரிசு படம் அதிகாலை 4 மணிக்கு முதல் காட்சி வெளியானது. வாரிசு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாகி உள்ளது. நள்ளிரவில் அஜித்தின் துணிவு ரிலீசான நிலையில், தற்போது விஜய்யின் வாரிசும் ரிலீசானதால் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

விஜய், தனக்கே உரிய பாணியில் நடித்து அசத்தி இருக்கிறார். முதல் பாதியில் அமைதியான அம்மா பாசம் கொண்ட விஜய்யையும் இரண்டாம் பாதியில் ஆக்ஷன், காமெடி, தந்தை பாசம் கொண்ட விஜய்யையும் பார்க்க முடிகிறது. விஜய் எப்பொழுதும் போல் மிகவும் சார்மிங்காக இருக்கிறார். நடனக் காட்சிகளில் அதகளம் செய்திருக்கிறார். ரசிகர்களுக்குத் தேவைப்படும் இடங்களில் பஞ்ச் வசனங்களை சரமாரியாகத் தெறிக்கவிட்டுக் கைத்தட்டல்களை அள்ளுகிறார். ஆக்சன் காட்சிகளில் பொறி பறக்கச் சண்டையிட்டு ரசிகர்களை சில்லறைகள் சிதற விடச் செய்கிறார்.

இந்தநிலையில், வாரிசு' படத்தை பார்த்துவிட்டு இசையமைப்பாளர் தமன் தேம்பி தேம்பி அழுதார். அவரை படக்குழுவினர் கட்டியணைத்து கண்ணீருடன் அவரை தேற்றினர். இது அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

1 More update

Next Story