'மாமன்னன்'-க்கு றெக்கை அளித்த மாரி செல்வராஜ் சாருக்கு நன்றி - உதயநிதி ஸ்டாலின்

மாமன்னன் படத்தை தன் வாழ்வில் மறக்கமுடியாத படமாக அமைத்து கொடுத்த இயக்குனர் மாரி செல்வராஜுக்கு மினி கூப்பர் கார் ஒன்றை உதயநிதி ஸ்டாலின் பரிசளித்துள்ளார்.
'மாமன்னன்'-க்கு றெக்கை அளித்த மாரி செல்வராஜ் சாருக்கு நன்றி - உதயநிதி ஸ்டாலின்
Published on

சென்னை,

நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள 'மாமன்னன்' படத்தை பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். இதில் வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படம் 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனால் படக்குழுவினர் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். மாமன்னன் படத்திற்கு கிடைத்துள்ள அமோக வரவேற்பால், இப்படத்தின் வெற்றியை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.

இந்நிலையில் மாமன்னன் படத்தை தன் வாழ்வில் மறக்கமுடியாத படமாக அமைத்து கொடுத்த இயக்குனர் மாரி செல்வராஜுக்கு மினி கூப்பர் கார் ஒன்றை உதயநிதி ஸ்டாலின் பரிசளித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், "ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக விவாதிக்கிறார்கள். தங்களுடைய எண்ணங்களை கதையுடனும் களத்துடனும் தொடர்புபடுத்தி கருத்துகளை பகிர்கிறார்கள். உலகத் தமிழர்களிடையே விவாதத்துக்குரிய கருப்பொருளாக மாறியிருக்கிறது. அம்பேத்கர், பெரியார், அண்ணா, கலைஞர் போன்ற நம் தலைவர்கள் ஊட்டிய சுயமரியாதை உணர்வை, சமூகநீதி சிந்தனைகளை இளம் தலைமுறையினரிடம் விதைத்துள்ளது. வணிகரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி. ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் மாரிசெல்வராஜ் சாருக்கு மினி கூப்பர் கார் வழங்கி மகிழ்ந்தது. உலகம் முழுவதும் பறக்க 'மாமன்னன்'-க்கு றெக்கை அளித்த என் மாரி செல்வராஜ் சாருக்கு நன்றி" என்று அதில் உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com