'171-வது படம் நல்லா வரும்'- ரஜினிகாந்த் பேட்டி

ரஜினிகாந்த் நடிக்க உள்ள 171-வது படத்தை லோகேஷ் கனகராஜ் டைரக்டு செய்கிறார்.
'171-வது படம் நல்லா வரும்'- ரஜினிகாந்த் பேட்டி
Published on

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' படம் வெற்றி பெற்று உலக அளவில் வசூலை வாரி குவித்துள்ளது. இந்த நிலையில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள 171-வது படத்தை லோகேஷ் கனகராஜ் டைரக்டு செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே மாநகரம், கைதி, விக்ரம் படங்களை இயக்கி உள்ளார். தற்போது விஜய் நடிக்கும் லியோ படத்தை இயக்கி வருகிறார்.

ரஜினியின் 171-வது படம் அதிரடி சண்டை படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதற்கிடையில் சென்னை போயஸ் கார்டனில் ரஜினிகாந்திடம் நேற்று "லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும்? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு ரஜினிகாந்த், 'தாமதம் ஆகும்' என்று பதில் அளித்தார். மேலும் படம் எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு, "வெயிட் பண்ணித்தான் பார்க்கணும். கண்டிப்பா நல்லா வரும்", என்று சிரிப்புடன் கூறினார்.

அடுத்து ஞானவேல் இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார். இந்த படத்தை முடித்த பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com