லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் முதல் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது..!


லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் முதல் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது..!
x
தினத்தந்தி 29 Nov 2023 1:13 PM GMT (Updated: 29 Nov 2023 1:20 PM GMT)

அப்பாஸ் ஏ ரஹ்மத் இயக்கும் இந்த படத்தில் 'உறியடி' விஜய்குமார் கதாநாயகனாக நடிக்கிறார்.

சென்னை,

'மாநகரம்', 'கைதி', 'மாஸ்டர்', 'விக்ரம்' போன்ற படங்களை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'லியோ' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூ. 500 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. இதைத்தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ், ரஜினியின் 171-வது படத்தை இயக்கி வருகிறார்.

இந்த நிலையில் 'ஜி ஸ்குவாட்' என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தை லோகேஷ் தொடங்கியுள்ளார். இதுகுறித்து கூறும்போது, நெருக்கமான நண்பர்கள் மற்றும் உதவி இயக்குனர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் வகையில் முதல் சில தயாரிப்புகள் அமையும் என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் முதல் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த படத்துக்கு 'பைட் கிளப்' (Fight Club) என்று பெயரிடப்பட்டுள்ளது. அப்பாஸ் ஏ ரஹ்மத் இயக்கும் இந்த படத்தில் 'உறியடி' விஜய்குமார் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.

இந்த பர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 'பைட் கிளப்' திரைப்படம் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



Next Story