'ஜாக்சன் துரை-2' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது..!

'ஜாக்சன் துரை-2' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
Image Courtesy:Twitter@Sibi_Sathyaraj
Image Courtesy:Twitter@Sibi_Sathyaraj
Published on

சென்னை,

கடந்த 2016-ஆம் ஆண்டு இயக்குனர் பி.வி.தரணி இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'ஜாக்சன் துரை'. இப்படத்தில் சத்யராஜ் மற்றும் சிபி சத்யராஜ் இணைந்து நடித்தனர். மேலும், பிந்து மாதவி, கருணாகரன், மொட்டை ராஜேந்திரன் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். காமெடி பேய் படமாக உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதைத்தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதிலும் சத்யராஜ், சிபிராஜ் இணைந்து நடிக்கிறார்கள். கதாநாயகியாக சம்யுக்தா விஸ்வநாதன் நடிக்கிறார். மேலும், சரத் ரவி, மணிஷா ஐயர், பாலாஜி, ரசிகா, யுவராஜ் கணேசன் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.  தற்போது, இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com