'நந்தன்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது

ரா.சரவணன் இயக்கியுள்ள 'நந்தன்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி உள்ளது.
'நந்தன்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது
Published on

சென்னை,

'சுப்ரமணியபுரம்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சசிகுமார். இன்றும் விமர்சகர்கள், ரசிகர்கள் மத்தியில் இத்திரைப்படம் தனி கவனத்தைப் பெற்று வருகிறது. சுப்ரமணியபுரத்துக்குப் பின் 'ஈசன்' படத்தை இயக்கிய சசிகுமார் அதன்பின் நடிப்பதில் கவனம் செலுத்தினார். பின்னர் 'அயோத்தி' வெற்றிப்படமாக அமைந்ததுடன் நல்ல பெயரையும் பெற்றுத் தந்தது.

'கருடன்' திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சசிகுமார் நடித்துள்ள 'நந்தன்' திரைப்படம் நீண்ட நாள் இடைவெளிக்கு பிறகு வெளியாக உள்ளது. இந்த படத்தினை 'உடன்பிறப்பே' என்ற படத்தை இயக்கிய ரா.சரவணன் இயக்கியுள்ளார். சசிகுமார் இதுவரை நாம் பார்த்திராத தோற்றத்தில் இப்படத்தில் நடித்துள்ளார். இவருடன் ஸ்ருதி பெரியசாமி மற்றும் பாலாஜி சக்திவேல் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தநிலையில், நந்தன் படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான 'எக்கி எக்கி பாக்குறான்' என்ற பாடல் வெளியாகி உள்ளது. தற்போது இந்த பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்த பதிவை இயக்குனர் ரா.சரவணன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com