ஏ.ஆர்.ரகுமான் இசையில் 'மாமன்னன்' படத்தின் முதல் பாடல் இன்று மாலை வெளியாகிறது

ஏ.அர்.ரகுமான் இசையில் வடிவேலு பாடியுள்ள பாடல் இன்று மாலை வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
ஏ.ஆர்.ரகுமான் இசையில் 'மாமன்னன்' படத்தின் முதல் பாடல் இன்று மாலை வெளியாகிறது
Published on

சென்னை,

பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ், தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் 'மாமன்னன்' படத்தை இயக்கியுள்ளார். இதில் உதயநிதி ஸ்டாலினுடன் மலையாள நடிகர் பகத் பாசில், நடிகர் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், 'மாமன்னன்' படத்தில் ஏ.அர்.ரகுமான் இசையில் வடிவேலு பாடியுள்ள பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com