'மாமன்னன்' படத்தின் முதல் பாடல் வரும் 19ம் தேதி வெளியாகும் - படக்குழு அறிவிப்பு...!


மாமன்னன் படத்தின் முதல் பாடல் வரும் 19ம் தேதி வெளியாகும் - படக்குழு அறிவிப்பு...!
x

‘மாமன்னன்’ படத்தின் முதல் பாடல் வரும் 19ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னை,

பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ், தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் 'மாமன்னன்' படத்தை இயக்கியுள்ளார். இதில் உதயநிதி ஸ்டாலினுடன் மலையாள நடிகர் பகத் பாசில், நடிகர் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியானது. நாளுக்கு நாள் 'மாமன்னன்' படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, 'மாமன்னன்' திரைப்படத்தில் நடிகர் வடிவேலு பாடல் ஒன்றை பாடியுள்ளதாகவும் விரைவில் இப்படத்தின் முதல் பாடல் வெளியாகவுள்ளதாகவும் படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில், 'மாமன்னன்' படத்தின் முதல் பாடல் வரும் 19ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

'இசைப்புயல்' ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் 'வைகைப்புயல்' வடிவேலு இப்பாடலை பாடியுள்ளார். இதனால் ரசிகர்கள் பாடலை ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டுள்ளனர்.



1 More update

Next Story