'இந்தியன் 2' படத்தின் முக்கிய அறிவிப்பு நாளை வெளியாகும் - படக்குழு அறிவிப்பு...!

சமுத்திரகனி, சித்தார்த், பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
'இந்தியன் 2' படத்தின் முக்கிய அறிவிப்பு நாளை வெளியாகும் - படக்குழு அறிவிப்பு...!
Published on

சென்னை,

1996-ல் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம், 'இந்தியன்'. இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. இயக்குனர் ஷங்கர் படத்தை இயக்குகிறார். சமுத்திரகனி, சித்தார்த், பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

லைகா, ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தின் முக்கியமான காட்சிகள் தைவானின் தைபே, தென்ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் உள்ளிட்ட நகரங்களில் படமாக்கப்பட்டுள்ளன. மேலும் சென்னையில் செட் அமைத்து படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இதனிடையே இந்த படத்திற்கான டப்பிங், எடிட்டிங் உள்ளிட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் 'இந்தியன் 2' படத்தின் முக்கிய அறிவிப்பு நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com