ரஜினி நடிக்கும் 'கூலி' படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது

ரஜினிகாந்த் நடிக்கும் 171-வது திரைப்படம்தான் கூலி.
ரஜினி நடிக்கும் 'கூலி' படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது
Published on

சென்னை,

வேட்டையனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'கூலி'படத்தில் நடிக்கவுள்ளார் ரஜினிகாந்த். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ரஜினிகாந்த் நடிக்கும் 171-வது திரைப்படம்தான் கூலி.

முதலில் கூலி டைட்டில் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து கடந்த மாதம் இறுதியில் ரஜினிக்கு ஹேர் ஸ்டைலிஷ் செய்யும் போட்டோவை லோகேஷ் ஷேர் செய்திருந்தார். அப்போதே அவர் 'கூலி' படத்தின் ஷூட்டிங் ஜூலையில் தொடங்குவதாக அறிவித்திருந்தார். இந்த நிலையில், 'கூலி' படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கி உள்ளது என படக்குழு அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com