விஜய் சேதுபதியின் 'டிரெயின்' படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது

இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
விஜய் சேதுபதியின் 'டிரெயின்' படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது
Published on

சென்னை,

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் நடிகர் விஜய் சேதுபதி, தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து வருகிறார். தற்போது 'மெரி கிறிஸ்துமஸ்', 'விடுதலை 2', 'மகாராஜா' உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் அவர், தொடர்ந்து இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் நேற்று வெளியானது . இந்த படத்துக்கு 'டிரெயின்' (Train) என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.தாணு தயாரிக்கிறார். இயக்குனர் மிஷ்கின் மற்றும் விஜய் சேதுபதி இணையும் 'டிரெயின்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், 'டிரெயின்' படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. பூஜையில் இயக்குனர் வெற்றிமாறன், நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர், தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகள் முரளி ராமசாமி, ராதாகிருஷ்ணன்,எஸ்.கதிரேசன், தயாரிப்பாளர் அன்புச்செழியன் மற்றும் நடிகர்,  நடிகைகள் கலந்துகொண்டனர் . இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com