'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' திரைப்படத்தின் ட்ரைலர் நாளை வெளியாகிறது

கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ திரைப்படத்தின் ட்ரைலர் நாளை வெளியாகிறது.
'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' திரைப்படத்தின் ட்ரைலர் நாளை வெளியாகிறது
Published on

சென்னை, 

'ஜிகர்தண்டா' திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' என பெயரிடப்பட்டுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்துக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த திரைப்படம் வருகிற 10-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டீசர் மற்றும் மூன்று பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றது. இதன் மூன்றாவது பாடலை சந்தோஷ் நாராயணன் மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து பாடியுள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்தின் ட்ரைலர்  நாளை வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில்  எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com