யோகிபாபு நடித்துள்ள 'தூக்குதுரை' படத்தின் டிரைலர் வெளியானது

'தூக்குதுரை' திரைப்படம் வருகிற 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
யோகிபாபு நடித்துள்ள 'தூக்குதுரை' படத்தின் டிரைலர் வெளியானது
Published on

சென்னை,

தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் யோகிபாபு தற்போது 'ட்ரிப்' படத்தை இயக்கிய இயக்குனர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் 'தூக்குதுரை' திரைப்படத்தில் நடித்துள்ளார். இனியா கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் ராஜேந்திரன், மகேஷ், பால சரவணன், சென்றாயன், மாரிமுத்து, நமோ நாராயணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மூன்று விதமான காலங்களில் நடைபெறும் நிகழ்வை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தை ஓபன் கேட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மனோஜ் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு ரவிவர்மா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படம் வருகிற 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், 'தூக்குதுரை' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டிரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com