அதர்வா நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது

இப்படத்திற்கு தற்காலிகமாக 'புரொடக்‌சன் நம்பர் 5' என்று படக்குழு பெயரிட்டுள்ளது.
அதர்வா நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது
Published on

சென்னை,

அதர்வா 2010-ல் 'பாணா காத்தாடி' படம் மூலம் நாயகனாக அறிமுகமானார். பரதேசி, இரும்பு குதிரை, கணிதன், இமைக்கா நொடிகள், குருதி ஆட்டம், பட்டத்து அரசன் உள்ளிட்ட பல முக்கிய படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது 'புரொடக்சன் நம்பர் 5' என்று தற்காலிக பெயர் கொண்ட புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்க அதர்வா ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்தில் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்க உள்ளார். இவர்கள் இருவரும் முதல் முறையாக இப்படத்தில் இணைய உள்ளனர்.

திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தராக வலம் வரும் ஸ்ரீ வாரி பிலிம் பி. ரங்கநாதன் இப்படத்தை தயாரிக்க உள்ளார். இயங்குநர் எம்.ராஜேஷ் இயக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார். நியூ ஏஜ் எண்டர்டெயினராக இந்தப் படம் உருவாகிறது. தற்போது இயக்குநர் ராஜேஷ் நடிகர் ஜெயம் ரவி படத்தை இயக்கி வருகிறார். அதனால் அந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் விரைவில் இதன் படப்பிடிப்பை தொடங்க உள்ளதாக தயாரிப்பாளர் பி.ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com