மீண்டும் சிரஞ்சீவி ஜோடியாக திரிஷா


மீண்டும் சிரஞ்சீவி ஜோடியாக திரிஷா
x

திரிஷாவுக்கு பொன்னியின் செல்வன் படத்துக்கு முன்பு நடித்த சில படங்கள் பெரிய வரவேற்பை பெறாமல் இருந்தது. அவை கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சத்தில் வந்தன. இதனால் மார்க்கெட் சரிந்த நிலையில் இருந்த திரிஷாவை பொன்னியின் செல்வன் வெற்றி தூக்கி நிறுத்தியது.

அதன்பிறகு பட வாய்ப்புகள் குவிய தொடங்கின. தற்போது லியோ படத்தில் விஜய் ஜோடியாக நடித்து வருகிறார். த ரோடு படமும் கைவசம் உள்ளது. இந்த நிலையில் தெலுங்கில் சிரஞ்சீவி ஜோடியாக புதிய படத்தில் நடிக்கவும் திரிஷாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். இவர்கள் இருவரும் ஏற்கனவே 2006-ல் வெளியான ஸ்டாலின் படத்தில் சேர்ந்து நடித்து இருந்தனர்.

அதன்பிறகு சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா படத்தில் நடிக்கவும் வாய்ப்பு வந்தது. ஆனால் அதில் தனது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இல்லை என்று நடிக்க மறுத்துவிட்டார். 17 வருடங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் சிரஞ்சீவிக்கு ஜோடி சேர்ந்துள்ளார். தந்தை, மகன் உறவை பற்றிய படமாக தயாராகிறது. இதில் சிரஞ்சீவி மனைவியாக திரிஷா நடிக்கிறார். இந்த படத்தை கல்யாண் கிருஷ்ணா டைரக்டு செய்கிறார். சிரஞ்சீவியின் மகள் சுஷ்மிதா தயாரிக்கிறார்.

1 More update

Next Story