ஜெயம் ரவி நடித்துள்ள 'அகிலன்' திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ்

ஜெயம் ரவி நடித்துள்ள ‘அகிலன்’ திரைப்படத்திற்கு தணிக்கைக்குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.
ஜெயம் ரவி நடித்துள்ள 'அகிலன்' திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ்
Published on

சென்னை,

இயக்குனர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள திரைப்படம் 'அகிலன்'. இப்படம் வருகிற மார்ச் 10-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் மற்றும் தான்யா ரவிச்சந்திரன் இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.

இந்த படத்தில் ஜெயம் ரவி இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும் ஒரு கதாபாத்திரம் கடற்படை அதிகாரி என்றும் தகவல் வெளியானது. ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'அகிலன்' திரைப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Screen Scene (@Screensceneoffl) February 28, 2023 ">Also Read:

X

Daily Thanthi
www.dailythanthi.com