'வேட்டையன்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் குறித்த அப்டேட்

'வேட்டையன்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான 'மனசிலாயோ' பாடல் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.
'வேட்டையன்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் குறித்த அப்டேட்
Published on

சென்னை,

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது தனது 170-வது படமான 'வேட்டையன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்க, இப்படத்தை 'ஜெய்பீம்' பட இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கியுள்ளார்.

அமிதாப்பச்சன், பகத் பாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகாசிங் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு நிறைவுபெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. இப்படம் அக்டோபர் மாதம் 10-ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

சமீபத்தில் நடிகை மஞ்சு வாரியர் படத்திற்கான டப்பிங் பணியில் ஈடுபட்டுள்ள புகைப்படங்களை படக்குழு பகிர்ந்தது. ஏற்கனவே துஷாரா விஜயன் மற்றும் பகத் பாசில் உள்ளிட்டோர் டப்பிங் பணிகளை முடித்துவிட்டனர்.

இந்த நிலையில் தற்போது, இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான 'மனசிலாயோ' என்ற பாடலின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்பாடல் வருகிற 9-ந் தேதி வெளியாக உள்ளது. இது குறித்த பதிவை லைகா நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com