'கடைசி உலகப் போர்' படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அப்டேட்

ஹிப் ஹாப் ஆதி 'கடைசி உலகப் போர்' படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.
'கடைசி உலகப் போர்' படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அப்டேட்
Published on

சென்னை,

நடிகரும் இயக்குனருமான ஹிப் ஹாப் ஆதி 'மீசைய முறுக்கு, நட்பே துணை, நான் சிரித்தால், அன்பறிவு' போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர். இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் 'பிடி சார்'. இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பு பெற்று வெற்றி படமாக அமைந்தது.

அதனை தொடர்ந்து ஹிப் ஹாப் ஆதி தற்போது 'கடைசி உலகப் போர்' என்ற படத்தில் நடித்துள்ளார். படத்தில் நாசர், அழகன் பெருமாள், அனகா,ஹரிஷ் உத்தமன், முனிஷ்காந்த், சிங்கம்புலி, இளங்கோ குமரவேல், தலைவாசல் விஜய், மகாநதி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை ஹிப்ஹாப் தமிழா என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது.

போர் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் கடந்த 20-ம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதன் இரண்டாம் பாகம் வருமென ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், அதை ஹிப் ஹாப் ஆதி உறுதிசெய்துள்ளார். 

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய ஆதி, இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதை 100 சதவிகிதம் தயாராகி இருக்கிறது. மேலும், இப்படத்திற்கான ப்ரீ புரோடக்சன் வேலைகளும் நடைபெற்று வருகின்றன. முதல் பாகத்தைவிட பெரிய பட்ஜெட்டில் இந்த படம் தயாராக உள்ளது. ஏஐ தொழில் நுட்பத்திற்க்கும் மனிதனுக்கும் இடையே நடக்கும் கதையை மையமாக கொண்டு இரண்டாம் பாகம் உருவாகிறது. ஆனால் முதல் பாகத்தைவிட இரண்டாம் பாகத்தின் கால அளவு குறைவாக இருக்கும் என்று கூறியுள்ளார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com