'வேட்டையன்' படத்தின் டிரெய்லர் குறித்த அப்டேட்

'வேட்டையன்' படம் வருகிற அக்டோபர் மாதம் 10-ந் தேதி வெளியாக உள்ளது.
'வேட்டையன்' படத்தின் டிரெய்லர் குறித்த அப்டேட்
Published on

சென்னை,

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது தனது 170-வது படமான 'வேட்டையன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்க, 'ஜெய்பீம்' பட இயக்குனர் த.செ.ஞானவேல் இப்படத்தை இயக்கியுள்ளார். அமிதாப்பச்சன், பகத் பாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகாசிங் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு நிறைவுபெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன.

'வேட்டையன்' படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகவுள்ளது. சமீபத்தில், இப்படத்தின் முதல் பாடலான 'மனசிலாயோ' பாடலும், இரண்டாவது பாடலான 'ஹண்டர் வண்டார்' பாடலும் வெளியாகி வைரலாகி வருகின்றன. சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அதனை தொடர்ந்து இப்படத்தின் டீசரும் வெளியானது.

ரஜினிகாந்த போலீஸ் அதிகாரியாக நடிக்கும் இப்படம், என்கவுன்டர் தொடர்பான ஆக்சன் படமாக உருவாகி உள்ளது. இப்படம் வருகிற அக்டோபர் மாதம் 10-ந் தேதி வெளியாக உள்ளது. படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால், டிரெய்லர் வருகிற அக்டோபர் 2-ந் தேதி, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com