பிஞ்சு மனங்களில் நஞ்சு கலக்க கூடாது, சாதி பாகுபாடுகளை விதைக்க கூடாது - கவிஞர் வைரமுத்து பேட்டி

சாதியை வலியுறுத்தி படங்கள் எடுக்கப்படுவதில்லை.. அப்படி எடுத்தால் வணிக ரீதியாக வெற்றி பெறாது என கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.
பிஞ்சு மனங்களில் நஞ்சு கலக்க கூடாது, சாதி பாகுபாடுகளை விதைக்க கூடாது - கவிஞர் வைரமுத்து பேட்டி
Published on

சென்னை,

சென்னை பெசன்ட் நகரில் கவிஞர் வைரமுத்து செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

நாட்டில் நடந்துக் கொண்டிருக்கும் சம்பவங்களை கவலையோடு பார்த்துக் கொண்டிருக்கிறோம். பிஞ்சு மனங்களில் நஞ்சு கலக்க கூடாது, அடித்தட்டு மக்களின் மனதில் சாதி பாகுபாடுகளை விதைக்க கூடாது.

கல்விக் கூடங்கள் என்பது சாதிகளை ஒழிக்க பிறந்த மன மருத்துவ நிலையங்கள், அந்த நிலையங்களிலேயே சாதி தலை தூக்குவதை பொறுத்துக் கொண்டிருக்க முடியாது. சாதி என்பதை ஒரு அடையாளம் என்ற அளவில் மட்டும் கருதினால் போதும், அதற்கு பெருமையோ இழிவோ கொடுக்க வேண்டாம்.

சாதி என்ற மாய பிம்பத்தை கடந்து கல்வி, அறிவு, பகுத்தறிவு மற்றும் சமவாய்ப்பு தளங்களில் முன்னேற வேண்டும் என அனைவருக்கும் கோரிக்கை வைக்கிறேன் என நாங்குநேரி கொடூரம் குறித்து கவிஞர் வைரமுத்து கருத்து தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com