மராட்டியத்தின் ஒரு அங்குல நிலம் கூட யாருக்கும் போக விடமாட்டோம் - முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே உறுதி


மராட்டியத்தின் ஒரு அங்குல நிலம் கூட யாருக்கும் போக விடமாட்டோம் - முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே உறுதி
x
தினத்தந்தி 25 Nov 2022 1:56 AM GMT (Updated: 25 Nov 2022 3:11 AM GMT)

மராட்டியத்தின் ஒரு அங்குல நிலம் கூட யாருக்கும் போக விடமாட்டோம் என்று முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே உறுதிபட தெரிவித்துள்ளார்.

மும்பை,

கர்நாடகம்-மராட்டியம் இடையே பெலகாவி விஷயத்தில் எல்லை பிரச்சினை நீடித்து வருகிறது. பெலகாவியை அம்மாநிலம் சொந்தம் கொண்டாடி வருகிறது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் இந்த எல்லை பிரச்சினை இரு மாநிலங்கள் இடையே மீண்டும் கிளம்பியுள்ளது.

இந்த நிலையில் மராட்டியத்தின் ஒரு அங்குல நிலம் கூட யாருக்கும் போக விடமாட்டோம் என்று முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே உறுதிபட தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறியதாவது:-

"மராட்டியத்தின் எல்லையை பாதுகாக்கும் விஷயத்தில் அரசு உறுதியாக உள்ளது. மராட்டியத்தின் ஒரு அங்குல நிலம் கூட யாருக்கும் போக விடமாட்டோம். இரு மநில எல்லையில் பிரச்சினை தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது. தற்போது வரை அந்த பிரச்சினை தீர்க்கப்படவில்லை. மராட்டியத்தின் ஒரு கிராமம் கூட கர்நாடகாவுக்கு செல்லாது" என்று கூறினார்.


Next Story