171-வது படத்தில் ரஜினிகாந்துடன் நடிக்கும் யஷ்?


171-வது படத்தில் ரஜினிகாந்துடன் நடிக்கும் யஷ்?
x

ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தை முடித்து விட்டு மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு புதுச்சேரியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்துக்கு பிறகு சூர்யாவை வைத்து ஜெய்பீம் படத்தை எடுத்து பிரபலமான ஞானவேல் டைரக்டு செய்யும் படத்தில் நடிக்க இருக்கிறார்.

உண்மை சம்பவம் கதையம்சம் கொண்ட படமாக இது தயாராவதாகவும், இதில் போலி என்கவுண்டருக்கு எதிராக போராடும் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக ரஜினி நடிக்கிறார் என்றும் தகவல். படப்பிடிப்பை விரைவில் தொடங்க உள்ளனர்.

தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கும் 171-வது படத்தை லோகேஷ் கனகராஜ் டைரக்டு செய்ய இருப்பதாகவும், இது ரஜினிக்கு கடைசி படமாக இருக்கும் என்றும் தகவல் பரவி உள்ளது. இந்த படத்தில் ரஜினிகாந்துடன் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல கன்னட நடிகர் யஷ் நடிக்க படக்குழுவினர் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. யஷ் வெற்றி பெற்ற கேஜிஎப் படத்தில் கதாநாயகனாக நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story