கல்லூரி வாழ்க்கையை பிரதிபலிக்கும் 'எங்க ஹாஸ்டல்' வெப் தொடர்


கல்லூரி வாழ்க்கையை பிரதிபலிக்கும் எங்க ஹாஸ்டல் வெப் தொடர்
x

சதீஷ் சந்திரசேகர் இயக்கத்தில் உருவாகியுள்ள இணையத் தொடர் ’எங்க ஹாஸ்டல்’. இந்த தொடர் வருகிற ஜனவரி 27-ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

சதீஷ் சந்திரசேகர் இயக்கத்தில் உருவாகியுள்ள இணையத் தொடர் 'எங்க ஹாஸ்டல்'.இது இந்தியில் வெற்றியைக் கொடுத்த இணையத்தொடரான ஹாஸ்டல் டேஸ்ஸின் தமிழ் வெர்ஷனாகும். நகைச்சுவை டிராமாவாக உருவாகி இருக்கும் இந்த இணையத்தொடரில் சச்சின் நாச்சியப்பன், அவினாஷ் ரமேஷ், சம்யுக்தா விஷ்வநாதன், சரண்யா ரவிச்சந்திரன், கெளதம் ராஜ் மற்றும் டிராவிட் செல்வம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

கல்லூரி ஹாஸ்டல் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த இணையத்தொடரை டிவிஎப் தயாரித்துள்ளார். இந்த இணையத் தொடர் வருகிற ஜனவரி 27-ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், 'எங்க ஹாஸ்டல்'இணையத் தொடர் குறித்து தயாரிப்பாளர் கூறியதாவது, "'எங்க ஹாஸ்டல்' இணையத் தொடர் தமிழ்நாடு ஹாஸ்டலில் உள்ள மாணவர்களது வாழ்க்கையில் எது போன்ற ஒரு அங்கம் வகிக்கிறது அது எப்படி அவர்களது வாழ்க்கையை மாற்றுகிறது என்பதை நகைச்சுவையாக படமாக்கியுள்ளோம். நம் உள்ளூர் கலாச்சாரத்தில் வேரூன்றி இருக்கும் இந்தத் தொடரின் பார்வை, எமோஷன் என எல்லாமே வேறாக இருக்கும். ப்ரைம் வீடியோவுடன் எங்கள் இணையத்தொடரின் தலைப்பை அறிவிப்பதன் மூலம் அனைத்து மொழி பார்வையாளர்களுக்கும் நாங்கள் சிறந்த உள்ளடகத்தைத் தர இருக்கிறோம்" என்று கூறினார்.


Next Story