என்னை சாய்த்தாலே.. புடவையில் அசத்தும் திரிஷா


என்னை சாய்த்தாலே.. புடவையில் அசத்தும் திரிஷா
x

நடிகை திரிஷா முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் நடித்த குந்தவை கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

மௌனம் பேசியதே, சாமி, கில்லி, திருப்பாச்சி, ஜி, ஆறு, குருவி, விண்ணைதாண்டி வருவாயா உள்ளிட்ட பல படங்களில் நடித்து தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொண்டவர் திரிஷா. மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் இவர் நடித்த குந்தவை கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதைத்தொடர்ந்து, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான 'லியோ' திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்தது. தற்போது அஜித் நடிக்கும் 'விடாமுயற்சி' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நடிகை திரிஷா சமூக வலைத்தளத்தில் அவரது லேட்டஸ்ட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். வெள்ளையில் நிற புடவையில் அவர் இருக்கும் இந்த புகைப்படத்திற்கு லைக்குகளை குவிக்கும் ரசிகர்கள் 'அவள் என்னை சாய்த்தாலே' என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.


Next Story