குண்டான் சட்டி அனிமேஷன் படம்


குண்டான் சட்டி அனிமேஷன் படம்
x

தமிழ் திரையுலகிற்கு 12 வயது பள்ளி மாணவி அகஸ்தி குண்டான் சட்டி அனிமேஷன் திரைப்பட வாயிலாக இயக்குனராக அறிமுகமாகி உள்ளார்.

ஐந்தாம் வகுப்பு மாணவர்களின் வாழ்க்கையில் நடக்கும் சுவாரசியமான விஷயங்கள், குறும்புத்தனங்களை மையமாக வைத்து `குண்டான் சட்டி' என்ற அனிமேஷன் படம் தயாராகி உள்ளது. இந்த படத்தை 7-ம் வகுப்பு படிக்கும் 12 வயது மாணவி பி.கே.அகஸ்தி டைரக்டு செய்துள்ளார்.

படம் பற்றி அவர் கூறும்போது, ``பள்ளிக்கூடத்திலும், வீட்டில் பெற்றோர்களிடத்திலும் மாணவர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையிலும், படித்து எப்படி முன்னேற வேண்டும், எப்படி விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்பதை உணரும் வகையிலும் இந்த படம் தயாராகி உள்ளது. எந்த நல்ல கருத்தையும் மாணவப் பருவத்தில் அறிவுறுத்தினால் பிற்காலத்தில் அவர்களின் வாழ்வியல் முறை சிறப்பாக இருக்கும் என்பதும் படத்தில் வலியுறுத்தப்பட்டு உள்ளது. தொழில் நுட்ப வல்லுனர்களுடன் கலந்து பேசி இந்தப் படத்தை உருவாக்கி உள்ளோம்'' என்றார்.

அனைத்து தொழில்நுட்ப பணிகள் முடிந்து படம் திரைக்குவர தயாராக உள்ளது. இசை: எம்.எஸ்.அமர்கீத், தயாரிப்பு: டாக்டர் எஸ்.ஏ.கார்த்திகேயன், திரைக்கதை, வசனம், பாடல்: அரங்கன் சின்னத்தம்பி.


Next Story