விஜய் சேதுபதியின் 51-வது படம்.. சூப்பர் அப்டேட் கொடுத்த படக்குழு

முக்கியமான இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. பிரம்மாண்ட சண்டைக்காட்சி, சேசிங் காட்சி படமாக்கப்பட்டது.
விஜய் சேதுபதியின் 51-வது படம்.. சூப்பர் அப்டேட் கொடுத்த படக்குழு
Published on

7 C-ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிப்பில், விஜய் சேதுபதி நடிக்கும் படத்தை இயக்குநர் பி. ஆறுமுக குமார் இயக்கி உள்ளார். இந்த படம், விஜய் சேதுபதி நடிக்கும் 51-வது படம் ஆகும். இந்த படத்தின் படப்பிடிப்பு, மலேசியாவில் நடைபெற்று வந்த நிலையில், படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முழுமையாக நிறைவடைந்தது.

இப்படத்தின் முழுக்கதையும் மலேசியாவில் நடக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' எனும் படத்தை இயக்கிய இயக்குநர் பி. ஆறுமுக குமார் இந்த படத்தை காதல், நகைச்சுவை, சென்டிமென்ட், ஆக்ஷன் காட்சிகள் அடங்கிய முழு நீள கமர்சியல் படமாக இப்படத்தை இயக்கி இருக்கிறார்

இதுவரை மலேசியாவில் படப்பிடிப்பு நடத்தப்படாத பல முக்கியமான இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. சைனீஸ் சண்டை கலைஞர்களுடன், விஜய் சேதுபதி கலந்துகொண்ட பிரம்மாண்ட சண்டைக்காட்சி, சேசிங் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. மலேசியாவின் மிகப்பிரபலமான பத்துமலை முருகன் கோவிலில், இறுதிக்காட்சியை படமாக்கி, படக்குழு படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளது.

விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கும் இப்படத்தில் பிரபல கன்னட நடிகை ருக்மணி வசந்த், யோகிபாபு, பி.எஸ். அவினாஷ், திவ்யா பிள்ளை, பப்லு, ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கரண் பகதூர் ராவத் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். கலை இயக்கத்தை ஏ.கே. முத்து கவனிக்க, படத்தொகுப்புப் பணிகளை ஆர். கோவிந்தராஜ் மேற்கொண்டிருக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் விரைவில் இதன் பின்னணி வேலைகள் துவங்க இருக்கிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com