இரும்பன்: சினிமா விமர்சனம்


இரும்பன்: சினிமா விமர்சனம்
x
நடிகர்: ஜுனியர் எம்.ஜி.ஆர் நடிகை: ஐஸ்வர்யா தத்தா  டைரக்ஷன்: கீரா இசை: ஸ்ரீகாந்த் தேவா ஒளிப்பதிவு : லெனின் பாலாஜி

குறவர் இனத்தைச் சேர்ந்தவர் நாயகன் ஜுனியர் எம்.ஜி.ஆர். பழையப் பொருட்களை சேகரித்து அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து பிழைப்பு நடத்துகிறார்.

வட இந்திய குடும்பத்தை சேர்ந்தவர் நாயகி ஐஸ்வர்யா தத்தா. ஒருமுறை ஐஸ்வர்யா தத்தா எளிய மக்களுக்கு உதவுவதைப் பார்க்கும் ஜூனியர் எம்.ஜி.ஆர். முதல் பார்வையிலேயே மனதைப் பறிக்கொடுப்பதோடு, காதலிக்கவும் செய்கிறார்.

ஆனால் நாயகி துறவியாக மாறி தொண்டு செய்யும் நோக்கத்தில் மடத்தில் சேர்ந்துவிடுகிறார்.

நாயகியின் முடிவை விரும்பாத நாயகன், அவரை கடத்தி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார்.

அந்த முயற்சிக்கு வெற்றி கிடைத்ததா, நாயகி ஏன் துறவியானார், அதன் பின்னணி என்ன என்பது மீதி கதை.

அறிமுக படத்திலேயே அசத்தலாக நடித்துள்ளார் நாயகன் ஜுனியர் எம்.ஜி.ஆர். குறவர் பாத்திரத்துக்கு ஏற்ற மாதிரி உடல்மொழி, தோற்றம் என அனைத்துக்கும் அழகாக பொருந்துகிறார்.

காதல், காமெடி, சண்டை, நடனம் எல்லாவற்றிலும் முழுமையான பங்களிப்புச் செய்துள்ளார். ஆஜானுபாகுவான அவருடைய உருவம் சண்டைக் காட்சிக்கு உதவுகிறது.

ஐஸ்வர்யா தத்தாவுக்கு வித்தியாசமான வேடம். தத்தளிக்கும் நடுக் கடலிலும் டவுசர் அணிந்து ரசிகர்களுக்கு கிளுகிளுப்பு தருகிறார்.

யோகி பாபுவின் காமெடிக்கு தியேட்டரில் சிரிப்பலையை கேட்க முடிகிறது.

சென்றாயன், அக்கா கணவராக வரும் ஷாஜி சவுத்ரி, போலீஸாக வரும் சம்பத்ராம் என அனைவரும் தங்கள் பங்களிப்பை கச்சிதமாக வழங்கியுள்ளார்கள்.

நடுக்கடல் மற்றும் வனப்பகுதி அழகை அற்புதமாக படமாக்கியுள்ளார் ஒளிப்பதிவாளர் லெனின் பாலாஜி. ஸ்ரீகாந்த் தேவா இசையில் 'நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடி' ரீமிக்ஸ் பாடல் கேட்கும் ரகம். பின்னணி இசையும் கதையை வேகமாக நகர்த்துகிறது.

இரண்டாம் பாதி திரைக்கதையில் தொய்வு இருப்பது படத்துக்கு பலகீனம். வித்தியாசமான காதல் கதையை விறுவிறுப்பாக படமாக்கி உள்ளார் இயக்குனர் கீரா.

1 More update

Next Story