காதல் பயணம் - "போலாமா ஊர்கோலம்" சினிமா விமர்சனம்


காதல் பயணம் -  போலாமா ஊர்கோலம் சினிமா விமர்சனம்
x
நடிகர்: மதுசூதன் ரெட்டி நடிகை: சக்தி மகேந்திரா  டைரக்ஷன்: நாகராஜ் பாய் துரைலிங்கம் இசை: ஷமந்த் நாக் ஒளிப்பதிவு : வைசாலி சுப்ரமணியன், டேவிட் பாஸ்கர்

காதல் ஜோடியை சேர்த்து வைக்க கால்பந்து விளையாடும் நடுத்தர வயதை கடந்த நண்பர்களின் வாழ்க்கை.

கால்பந்தாட்ட வீரர் மதுசூதன் ரெட்டி தனது அணியுடன் ஊர் ஊராக போய் விளையாடி வருகிறார். அவருக்கு இளம் வயதில் காதல் வந்து நிறைவேறாமல் போகிறது. வயதானதும் அந்த பெண் காதலை வெளிப்படுத்துவதுடன் போட்டியில் வென்று வர சொல்கிறாள். காதலிக்காக விளையாட சென்று தோற்று விடுகிறார். காதலியும் மறைகிறார்.


காதலி சமாதியில் வெற்றி கோப்பையை வைப்பதாக உறுதி எடுக்கும் மதுசூதன் அடுத்த போட்டியில் பங்கேற்க பயணிக்கும்போது ஒரு இளைஞரின் காதல் தோல்வி கதையை கேட்டு வருந்துகிறார். ஆபத்தில் இருக்கும் அந்த காதல் ஜோடியை சேர்த்து வைக்க கால்பந்து விளையாடுகிறார். அதில் வெற்றி பெற்றாரா? காதலர்கள் சேர்ந்தார்களா? என்பது மீதி கதை.


நடுத்தர வயதை கடந்த நண்பர்களின் கால்பந்து விளையாட்டு, காதல் என்று ஆரம்பத்தில் படம் மெதுவாக நகர்கிறது. ஆபத்தில் இருக்கும் இளம் காதல் ஜோடியின் வரவுக்கு பின் வில்லன்கள் துரத்தல், பெண்கள் கடத்தல் என்று கதை விறுவிறுப்புக்கு மாறி அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பை எகிற வைக்கிறது. மதுசூதன் ரெட்டி கதாபாத்திரத்தில் ஒன்றி நடித்து இருக்கிறார். கால்பந்து விளையாட்டு வீரர்களாக வரும் அனைவரும் யதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். பிரபுஜித், சக்தி ஆகியோரின் உணர்வுப்பூர்வமான காதல் காட்சிகள் மனதில் நிற்கின்றன. திரைக்கதையை இயக்குனர் நாகராஜ் பாய் துரைலிங்கம் நேர்த்தியாக நகர்த்தி கவனம் பெறுகிறார். வைசாலி சுப்ரமணியன், டேவிட் பாஸ்கர் ஒளிப்பதிவும் கே.எம்.ராயன் பின்னணி இசையும் படத்துக்கு வலு சேர்த்துள்ளன.


மதுசூதன் ரெட்டி


Next Story