ஸ்ட்ரைக்கர் - சினிமா விமர்சனம்


ஸ்ட்ரைக்கர் - சினிமா விமர்சனம்
x
நடிகர்: ஜஸ்டின் விஜய் நடிகை: வித்யா பிரதீப்  டைரக்ஷன்: எஸ்.ஏ.பிரபு இசை: விஜய் சித்தார்த் ஒளிப்பதிவு : மனிஷ் மூர்த்தி

கார் மெக்கானிக் ஜஸ்டின் விஜய் பழுது பார்த்த காரை உரிமையாளர் எடுத்துச் செல்லும்போது விபத்தாகி காரில் இருந்தவர்கள் இறந்து விடுகின்றனர். அதை நினைத்து வருந்துகிறார்.

பிறகு ஆவிகளுடன் பேச அமானுஷ்ய பயிற்சியாளர் கஸ்தூரியிடம் கற்கிறார். வித்யா பிரதீப்பை காதலிக்கவும் செய்கிறார். ஒரு கட்டத்தில் ஆவிகளுடன் தன்னால் பேச முடியும் என்று ஜஸ்டின் விஜய் சொல்வதை வித்யா பிரதீப் நம்பாமல் ஏளனம் செய்கிறார்.

இந்த நிலையில் ஒரு வீட்டில் பேய் இருப்பதாகவும் அதை விரட்ட வேண்டும் என்றும் ஜஸ்டின் விஜய்க்கு அழைப்பு வருகிறது. அதை ஏற்று அங்கு செல்கிறார். காதலியும் வருகிறார். பேய் பங்களாவில் காதலியுடன் அவர் சந்திக்கும் பிரச்சினைகள் என்ன? பேயை விரட்ட முடிந்ததா? என்ற கேள்விகளுக்கு விடையாக மீதி கதை…

நாயகன் ஜஸ்டின் விஜய் கதாபாத்திரத்துக்கு தேவையான நடிப்பை வழங்கி உள்ளார். கிளைமாக்சில் பேய் பிடியில் சிக்கி தப்பிக்க போராடும் காட்சிகளில் பயத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

வித்யா பிரதீப் அழகான காதலியாக வசீகரிக்கிறார். கிளைமாக்சில் திறமையான நடிகை என்றும் நிரூபித்து உள்ளார். அமானுஷ்ய பயிற்சியாளராக வரும் கஸ்தூரி அனுபவ நடிப்பை வழங்கி உள்ளார். டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் சிறிது நேரம் வந்தாலும் மனதில் நிற்கிறார்.

ஆரம்ப காட்சிகள் மெதுவாய் நகர்கின்றன. திரைக்கதையில் இன்னும் திகிலூட்டி இருக்கலாம்.

விஜய் சித்தார்த் இசை, மனிஷ் மூர்த்தி ஒளிப்பதிவும் திகில் கதைக்கு உதவி உள்ளது.

வித்தியாசமான பேய் கதை மூலம் பயமுறுத்த முயற்சி செய்துள்ளார் இயக்குனர் எஸ்.ஏ.பிரபு, கிளைமாக்ஸ் எதிர்பாராத திருப்பம்.


Next Story